அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
போச்சம்பள்ளி, அக்.10: மத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் எம்.மோட்டூரில் நடந்தது. ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, நரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய, அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அசோக்குமார், சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரமேஷ், மாணவர் அணி செயலாளர் சக்தி, பியாரேஜான், மனோகரன், விநாயகமூர்த்தி, ஜெயந்தி புகழேந்தி, முனுசாமி, பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement