திமுக பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம்
காவேரிப்பட்டணம், அக்.10: காவேரிப்பட்டணத்தில், பேரூர் திமுக சார்பில் பூத் கமிட்டி ஒருங்கினைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம், நகர பொருப்பாளர் ஜேகேஎஸ் சாஜீத் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் தேவகுமார் பேசுகையில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக வாக்கு சாவடி முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், முன்னாள் நகர செயலாளர் பாபு, மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், செந்தில்குமார், மாலனி மாதையன், மணி விஜயன், விஜயகுமார், மீனாட்சி பூங்காவனம், வேல்முருகன், ஜெகதீசன், மோகன், சக்திவேல், பாஸ்கர், பசுபதி மற்றும் கிளை செயலாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.