தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓசூரில் சிமெண்ட் கலவை லாரியில் மின்கம்பி சிக்கியது

ஓசூர், ஆக.8: சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 2 ரெடிமேட் சிமெண்ட் கலவை மிக்சிங் செய்யும், புதிய லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு தேவனஹள்ளி பகுதிக்கு சென்றது. ஓசூர் நகர் பகுதியில் பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் சிக்கி இழுத்து சென்றது. இதில் சாலையோரம் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. லாரியில் மின்கம்பிகள் சிக்கியதில் ஓட்டல் மற்றும் கார்நேஷன் கிளப் ஆகியவற்றின் மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தது. அந்த நேரம் பொதுமக்கள் யாரும் சாலையில் செல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அப்போது அங்கு நின்றவர்கள் லாரி டிரைவரை எச்சரித்ததால், லாரி டிரைவர் அதிர்ச்சியில் லாரியை ஓரம்கட்டி நிறுத்த முயன்றதில் சாலையோரம் நின்ற கார்கள் மீது மோதியது. இதில் இரண்டு கார்கள் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அண்ணா நகர், சாந்தி நகர், உமாசங்கர நகர் ஆகிய குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், அறுந்த மின்கம்பிகள், சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.