வேலைக்கு சென்ற மேஸ்திரி மாயம்
ஊத்தங்கரை, டிச.7: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகேயுள்ள குன்னத்தூர் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(38). இவர் டிரைவராகவும், மேஸ்திரியாகவும் வேலை செய்து வந்தார். பிரகாஷ், கல்குவாரன்பட்டியை சேர்ந்த விஜயன் உள்பட சிலருடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி வெளியூருக்கு வேலைக்கு சென்றார். அவர்களில் அனைவரும் ஊர் திரும்பிய நிலையில் பிரகாஷ் மட்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவருடன் சென்று திரும்பிய மற்றவர்களிடம் விசாரித்தபோது, பிரகாஷ் அங்கிருந்து வேறு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், அவரது செல்போன் உடைந்து போனதாகவும் தெரிவித்தனர். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி பிரகாஷின் தாய் காசியம்மாள் சாமல்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.