பர்கூர், கிருஷ்ணகிரியில் சமையல் மாஸ்டர் தொழிலாளி மாயம்
கிருஷ்ணகிரி, டிச.7: திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்(40). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தங்கியிருந்து சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆஷிக் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மனைவி ஆயிஷா பர்கூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி அவ்வை நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(21), கூலிதொழிலாளியான இவர் கடந்த மாதம் 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் திரும்பவில்லை. இதபற்றி அவரது தாய் ரத்தினா அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement