ரூ.1.50 கோடியில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை
தேன்கனிக்கோட்டை, டிச.6: தேன்கனிக்கோட்டையில் ரூ.1.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமச்சந்திரன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. 1வது வார்டில் ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை, 6வது வார்டில் ரூ.9.90 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 5வது வார்டில் ரூ.9 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 10வது வார்டில் ரூ.9.90 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 3வது வார்டில் ரூ.9.70 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 18வது வார்டில் ரூ.10 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு லகுமைய்யா, நகர செயலாளர் நாகராஜ், வார்டு கவுன்சிலர்கள் முகமதுசெரிப், சல்மான், அப்தூர்ரஹ்மான், மணிவண்ணன், கிருஷ்ணன், ஜெயந்த், இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.