ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி
காவேரிப்பட்டணம், நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் 16வது மாநில மாநாட்டிற்கான சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் உதயகுமார், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாநில பொருளாளர் மதன், மாவட்ட தலைவர் மூர்த்தி, கட்டுமர சங்கம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், இந்திய தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா, மாநில செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன், விவசாய சங்க துணை தலைவர் ராஜா உள்ளிட்ட சிஐடியூ மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அங்கன்வாடி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.