ஊத்தங்கரை அருகே நகை, பணத்துடன் இளம்பெண் திடீர் மாயம்
ஊத்தங்கரை, டிச.2: ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே வீரனகுப்பத்தை சேர்ந்தவர் ராணி. இவரது மகள் சாருமதி (24). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் வீட்டில் இருந்த சாருமதி திடீரென மாயமானார். வீட்டில் இருந்த அரை பவுன் நகை மற்றும் 3000 பணத்துடன் அவர் மாயமாகியிருப்பது தெரிந்தது. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
Advertisement
இதுபற்றி நேற்று முன்தினம் கல்லாவி காவல்நிலையத்தில் ராணி புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement