காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
வேப்பனஹள்ளி, டிச.2: வேப்பனஹள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் அமரேந்திரன்(25). இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே பள்ளியில் படித்து வந்த மாணவி காளியம்மாள் என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று இருவரும் வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து விசாரனை மேற்கொண்ட போலீசார் இருவரும் மேஜர் என்பதால் இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்து பெண்ணின் விருப்பப்படி அமரேந்திரனுடன் அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement