அரசு பெண்கள் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட பயிற்சி
ஓசூர், அக்.1:ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட பயிற்சி நடந்தது. அதில் பெண்களுக்கான கல்வி திட்டம், அரசால் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சலுகைகள் பயன்படுத்தி உயர்கaல்வி படிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு பெண்களுக்கான சட்டங்களை பற்றி விழிப்புணர்வு நடந்தது. வழக்கறிஞர் சுவேதா ஸ்ரீ, ஏஞ்சல் ஆப் ஜஸ்டிஸ் ரைட் ஆப் உமன் என்ற பெண்களுக்கான சட்ட நூல் புத்தகத்தை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினார். அதில் ஆராதனா டிரஸ்ட், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement