தடையை மீறி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
Advertisement
கிருஷ்ணகிரி, டிச. 8: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கலைகோபி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் திலீப், பாஜ மாவட்ட செயலாளர் சரண்யா உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி டிஎஸ்பி முரளி மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
Advertisement