சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
Advertisement
கிருஷ்ணகிரி, டிச.8: கிருஷ்ணகிரியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் பெங்களூர் ரோடு, சேலம் சாலை, பழைய சப்ஜெயில் ரோடு, காந்தி சாலை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தன. இதனால், அடிக்கடி வாகன விபத்துகளும், மாடு முட்டி விபத்துகளும் ஏற்பட்டன. இது குறித்து பொதுமக்கள் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நகரில் மாடுகளை வளர்ப்போர், எவ்வித அச்சமுமின்றி காலையில் மாடுகளை அவிழ்த்து விடுவதால், மாடுகள் நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.
Advertisement