போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் விநாயகர் சிலைகள் பக்தர்கள் அதிருப்தி
போச்சம்பள்ளி, செப்.3: தமிழகம் முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சிலை அமைப்பாளர்கள், தங்கள் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை லாரி, டெம்போ, கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். ஆனால், பெரும்பாலான சிலைகள் முழுமையாக கரையாமல் மிதக்கிறது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் சிலைகளை முழுமையாக கரைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement