சூளகிரி பகுதியில் விளைச்சல் குறைவால் புதினா விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ஓசூர், செப். 3: ஓசூர் அருகே சூளகிரி தாலுகாவில் ஏனுசோனை, கெட்டூர், சாமனப்பள்ளி, உலகம், உள்ளட்டி, பி.கொத்தப்பள்ளி, எட்டிப்பள்ளி, அலேசீபம், அனாசந்திரம், மைதாண்டபள்ளி, மாரண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதினா, காய்கறிகள், கொத்தமல்லி, கீரை வகைகள் உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் புதினா விளைச்சல் குறைவால் புதினா விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு ரூ.15க்கு விலை போவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிகமாக புதினா சாகுபடி செய்யப்பட்டதால், புதினா வாங்குவதற்கு வியாபாரிகளே இல்லாத இந்த நிலையில், புதினா சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது,’ என்றனர்.
Advertisement
Advertisement