தார்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
வேப்பனஹள்ளி, ஆக.19: வேப்பனஹள்ளி பகுதியில் எரு, செங்கல் மற்றும் மண் ஆகியவற்றை லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு லோடு ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள், தார்பாய்கள் கொண்டு மூடப்படாமல் செல்வதால், தூசுகள் காற்றில் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தார்பாய் மூடாமல் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் மீது, அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.