ராக்கெட் பந்து போட்டியில் சேலம் அணி முதலிடம்
ஓசூர், ஆக.19: கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான ராக்கெட் பந்து விளையாட்டு போட்டியில் பெண்கள் அணியில் சேலம் அணியும், ஆண்கள் அணியில் திருச்சி அணியும் முதலிடம் பிடித்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதல்முறையாக மாநில அளவிலான ராக்கெட் பந்து விளையாட்டு போட்டி, அந்திவாடி ஸ்டேடியத்தில் நடந்தது. இப்போட்டியில் திருச்சி, கரூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, விழுப்புரம், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மகளிர் பிரிவில் சேலம் அணியும், ஆண்கள் பிரிவில் திருச்சி அணியும் முதலிடம் பெற்று, கோப்பையை தட்டிச்சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் பீட்டர் சத்யராஜ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள் வெங்கடேஷ், மனோஜ்குமார், பாபு, அண்ணாதுரை, மகாதேவன், சரோஜா, லலிதா, பாக்யலட்சுமி, இந்திராணி, கோவர்த்தனன், அபு, ஜிம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.