மேம்பால சுவரில் அமர்ந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
கோவை, அக்.30: சிவகங்கையை சேர்ந்தவர் காளீஸ்வரன் (33). இவர், துடியலூர் என்ஜிஜிஓ காலனியில் தங்கிருந்து கூலி வேலை செய்து வந்தார். மதுப்பழக்கம் உடைய காளீஸ்வரன் கடந்த 27ம் தேதி சித்ரா நகரில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தியுள்ளர். பின்னர் ஸ்டேட் பேங்க் காலனி பகுதி நடந்து சென்றார். மது போதையில் இருந்த அவர் அங்குள்ள கருப்பராயன் கோயில் பாலம் சுவரில் அமர்ந்து உள்ளார்.
Advertisement
அப்போது, திடீரென அவர் பாலத்தில் இருந்து தவறி 10 அடி பள்ளத்தில் விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் காளீஸ்வரனை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து காளீஸ்வரனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
Advertisement