ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்
கோவை,செப்.27: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினருடனான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு சார்பில் ஜிஎஸ்டி ஆணையர் தினேஷ்ராவிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, ‘‘ஜாப் ஆர்டர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
Advertisement
18 சதவீத வரி விதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமை மற்றும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதேபோல கோவையின் பிரதான உற்பத்தி துறையான வெட் கிரைண்டர்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement