சூலூர் வட்டாட்சியர் ஆபீசில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
சூலூர், செப்.26: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டம் காரணமாக பரபரப்பு நிலவியது.
Advertisement