சுந்தராபுரம் பகுதியில் விதிமுறை மீறி கட்டிய கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல்
மதுக்கரை, செப்.26: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் 96-வது வார்டு பகுதியில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதி, 4-வது தெரு பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு வருவது குறித்து, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இதனைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் தங்கசாமி என்பவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், தொடர்ந்து பணியை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, நேற்று சுந்தராபுரம் போலீசாருடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள், விதி மீறி நடந்த கட்டுமான பணிகளை நிறுத்தி மின் இணைப்பை துண்டித்து, தடுப்பு வேலி அமைத்து சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement