திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்
மதுக்கரை, அக்.24: கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10,11,12,13,14,15 ஆகிய வார்டு பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாம் செம்பகாளியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமை, மதுக்கரை தாசில்தார் வேல்முருகன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், பேரூராட்சி தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலையில், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பேரூர் கழக செயலாளர் ராமராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கலங்கல் கிளை செயலாளர் சிவகுமார், பேரூராட்சி துணை தலைவர் கோகிலா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ரமேஷ் குமார், ஆனந்தகுமார், ரமேஷ்பாபு, முருகாத்தாள், இளைஞர் அணி அமைப்பாளர் மேத்யூ உள்பட பலர் கலந்து கொண்டனர். 13 அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு முகாமில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மனுக்களை அளித்தனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக பொதுமக்கள் 129 பேர் மனு அளித்தனர்.