செஞ்சேரிமலையடிபாளையம் பகுதியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
கோவை, அக். 24: கோவை மாவட்டம் வ.சந்திராபுரம் வட்டாரம் செஞ்சேரிமலையடிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் நாளை (சனிக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாம் காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 4 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இம்முகாமில் இடம்பெறுகிறது.
இது மட்டுமின்றி, கூடுதல் சிறப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுக்கான மாற்றுத்திறன் சக்தியை கண்டறிந்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்திற்கும் இம்முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, மருத்துவ வசதிகளை இலவசமாக பெறலாம் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.