மாநகருக்குள் நுழைந்த ரவுடி மீது வழக்கு
கோவை, ஆக. 22: கோவை ஆர்எஸ் புரம் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரபு என்கிற குண்டு பிரபு (33). இவர், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்தார். பல்வேறு வழக்குகளும் அவர் மீது உள்ளது. இதனால், போலீசார் 6 மாதங்கள் அவரை மாநகரை விட்டு வெளியேற 51 ஏ சம்மன் வழங்கினர்.
Advertisement
இதையடுத்து அவர் ஆலாந்துறை பகுதியில் வசித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து ஆர்எஸ் புரம் போலீசார் தடையை மீறி மாநகருக்குள் புகுந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement