கோவை வடக்கு மாவட்ட காங். சார்பில் ராஜீவ்காந்தி 81வது பிறந்த நாள் விழா
கோவை, ஆக. 21: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 81 வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, சூலூர் பட்டணம் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு, மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertisement
நிகழ்ச்சியில், வட்டார தலைவர் ராயல் மணி, மாவட்ட பொதுச்செயலாளர் வி.எம்.ரங்கசாமி, கிராம கமிட்டி தலைவர் மணி, சுல்தான்பேட்டை வட்டார தலைவர் சவுந்தர்ராஜன், கே.என்.கே.சந்தோஷ், ஓ.பி.சி மாநில செயலாளர் அசோக், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ராஜன், முத்துகவுண்டர் புதூர் ராமசாமி, கள்ளபாளையம் பாலு, எச்.எம்.எஸ். நாகராஜ், கவுன்சிலர் நாகராஜ், கேகோவிந்தராஜ், எம்.சுப்பிரமணியம், மயில்வாகனன், கேபிள் பாலு, பெரியசாமி, கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement