வீட்டை சுத்தம் செய்தபோது ஏணியில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
கோவை, ஆக. 20: கோவை வடவள்ளி டிவிகே நகரை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் (67). இவர், கடந்த 15ம் தேதி வீட்டை சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அப்போது ஏணியில் ஏறி 10 அடி உயரத்தில் இருந்த ஜன்னலை துடைத்தார். அதில் எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார்.
Advertisement
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement