செஞ்சேரி மலையில் நூலகம் திறப்பு விழா
சூலூர், அக்.17: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. பெரிய வதம்பச்சேரி நல்லூர்பாளையம் ஜல்லிபட்டி, குமாரபாளையம், செஞ்சேரிமலை மற்றும் நகர களந்தை போன்ற பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு, நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
சுல்தான் பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்து மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்துகொண்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் புதிய பணிகளுக்கு பூமி பூஜைகள் நடத்தி துவக்கி வைத்தார். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அட்மா தலைவர் மந்திராச்சலம், வழக்கறிஞர் மணிகண்டன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.