கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்
கோவை, அக்.17 : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
இந்த ரயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக இன்றும் (அக்.17), 18, 21, 22 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது. அன்றைய நாட்களில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு கிளம்பும் அந்த ரயில் மதியம் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் எனவும், திண்டுக்கலில் இருந்து அதே நாட்களில் மதியம் 2 மணிக்கு கிளம்பும் ரயில் மாலை 5.50க்கு கோவை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement