போத்தனூர், ஸ்ரீராம் நகரில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்
கோவை, அக். 16: கோவை போத்தனூர், ஸ்ரீராம் நகரில் மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைக்கழிவுகளும் அங்கு கொட்டப்படுகின்றன. இதனால் அருகே வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
மேலும் இந்த குப்பை கழிவுகளால் அந்த சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைதல், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்படையும் சூழலும் உள்ளது. காற்றின் வேகத்தில் ஸ்ரீராம் நகர், மேட்டூர், அன்பு நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கழிவுகளை கொட்ட மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement