கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுக்கரை, செப்.15: மலுமிச்சம்பட்டி சிட்கோ பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு மாறு வேடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும் வகையில் ஒரு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தனர், அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரது நண்பரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, ஆந்திராவை சேர்ந்த கண்டால ராம லட்சுமன் (20), வீரபாபு ((21) ஆகியோரிடம் இருந்த சுமார் 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.