காட்டு தேனீ கொட்டியதில் 10 பக்தர்கள் காயம்
Advertisement
தொண்டாமுத்தூர், அக்.13: பேரூர் அருகே தீத்திபாளையம் பெருமாள் குன்றில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை காட்டு தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பேரூர் அருகே தீத்திபாளையம் பெருமாள் குன்றில் உள்ள பெருமாள் கோயிலுக்கு கடைசி சனிக்கிழமையான நேற்று முன்தினம் பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர்.
அன்னதானம் நடைபெற்ற போது காட்டு தேனீக்கள் கொட்டி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அந்த பகுதியில் உள்ள கிளினிக்கில் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
Advertisement