அடையாளம் தெரியாத ஆண் சடலம்
கோவை, செப்.13 : கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிழக்கு லோகமான்யா தெருவில் உள்ள சிட்டி பிளைவுட் கடையின் முன்பு கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Advertisement
இதில் அந்த நபர் 65 வயது மதிக்கத்தக்க வேலூரை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்த நிலையில், அவரின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 3ம் தேதி அவரது உடல் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், இவர் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை அணுகுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement