தனியார் பூச்சி மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு
மதுக்கரை, செப்.12: கோவை மாவட்டம், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் ஒரு தனியார் பூச்சிமருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்கள், கலைச்செல்வி, சக்திவேல், தரக்கட்டுபாடு அலுவலர்கள் சீதா, செல்வி. உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர், பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தின் மூலக்கூறு மற்றும் உற்பத்தி பதிவேடு, மாசு கட்டுபாடு சான்று, தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அரசு பதிவுபெற்ற மருத்துவரின் இசைவுக்கடிதம், உற்பத்தி செய்யப்பட பூச்சிமருந்து இனத்திற்குரிய மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதற்கான மூலக்கூறு, உற்பத்தியாளரின் இசைவுக்கடிதம், தொழிலாளர் வருகை பதிவேடு, வேதியியலரின் விவரம், பூச்சி மருந்து சட்டம் 1968 மற்றும் விதி 1971-ன் படி தொழிலாளர்களுக்கு உரிய பராமரிப்பு, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சலுகைகள் அளிக்கப்படுகிறதா? என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.