மண்ணுளி பாம்பு மீட்பு
Advertisement
கோவை, அக்.11: கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள கோவில்மேடு பகுதியில் சாலையோரத்தில், நேற்று முன்தினம் இரவு இரண்டரை அடி நீளமுள்ள ஒரு மண்ணுளி பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கீரின் கேர் என்ற தன்னார்வ அமைப்பினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற அவ்வமைப்பினர் மண்ணுளி பாம்பினை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த பாம்பு கோவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
Advertisement