அனுமதி ஆணை வழங்கல் அதிக ரத்த தானம் வழங்கிய நா.கார்த்திக்கு சிறப்பு விருது
Advertisement
கோவை, அக். 11: சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவையில் அதிக ரத்த தானம் வழங்கியதற்காக தளபதி ரத்ததான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக் சிறப்பு விருது வழங்கப்பட்டது. மேலும், பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Advertisement