சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, செப்.11 : கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்ணப்பன் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜவேல் முன்னிலை வகித்தார். அப்போது காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலதாமதமின்றி சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
Advertisement
காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொகுப்பூதியத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை குறைக்கும் அரசாணைகளில் உரிய திருத்தங்கள் செய்திட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Advertisement