உலகப் புத்தொழில் மாநாடு ஒரு உலகத் தரமான நிகழ்வு
கோவை, அக்.10 : கோவை கொடிசியாவில் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு தொடர்பாக சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் தேவக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘உலகப் புத்தொழில் மாநாடு ஒரு உலகத் தரமான நிகழ்வு. இதில் முக்கிய தொழில் பிரதிநிதிகளுடன் ஹொழில் இணைப்பு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இம்மாநாடு கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு புதிய தொழில் வளர்ச்சி மற்றும் புதுமை வாய்ப்புகளை பெற உதவும் என நம்புகிறோம். இத்தகைய சிறப்பான சர்வதேச மாநட்டை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி. இதேபோல அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு கோவையின் தொழில் முன்னோடி ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.