பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி போலீசில் தஞ்சம்
கோவை, செப். 10: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த ஹரிணி என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன்-பச்சையம்மாள் தம்பதி மகன் ருபேஸ்குமார் என்பவரும் காதலித்து வந்தோம். நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
எனது பெற்றோர், வடமதுரை போலீஸ் நிலையத்தில் எனது கணவர் ருபேஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கடத்திவிட்டதாக பொய் புகார் அளித்துள்ளனர். மேலும், தனது கணவரின் பெற்றோரையும், சகோதரர்களையும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால், எங்களுக்கும், எனது கணவர் குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எங்களுக்கும், எனது கணவர் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.