கூடலூர் நகராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
பெ.நா.பாளையம், செப்.10: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் தார் சாலை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. 13-வது வார்டு ரேஷன் கடை வீதியில் பழுதடைந்த சாலையை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
Advertisement
நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் நகராட்சி தலைவர் அறிவரசு கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பூவேந்திரன், துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் வனிதா மணி, துரை செந்தில், மாணவர்அணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன், பிட்டர் வேலாயுதம், சுந்தர்ராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement