மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
பாலக்காடு, டிச.8: பாலக்காட்டில் மாவட்ட அளவில் கொடிநாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டியிடம் இருந்து என்.சி.சி மாணவர்கள் உண்டியலில் கொடி நாள் தொகை வசூலித்தனர். இந்த தினத்தில் அதிகபட்சமாக பணம் சேகரிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கும், என்.சி.சி பட்டாலியன் குழுவினருக்கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
Advertisement
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ராணுவ நலத்துறை அதிகாரி முகமது அஸ்லம் தலைமை தாங்கினார். இதில் சுபேதார் சதீஷ் தாபா, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement