சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
கோவை, நவ. 5: கொமதேக கோவை வடக்கு மாநகர மாவட்டச் செயலாளர் ரமேஷ் என்கிற மயூரநாதன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘விளாங்குறிச்சி முதல் தண்ணீர்பந்தல், ராமகிருஷ்ணா மில் சந்திப்பு முதல் நல்லாம்பாளையம், சங்கரா கல்லூரி முதல் அத்திப்பாளையம் பிரிவு, துடியலூர் முதல் அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
Advertisement
மாநகராட்சி சார்பில் விதிக்கப்படும் சொத்து வரி, குப்பை வரிகளை குறைக்க வேண்டும். துடியலூர்- சரவணம்பட்டி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும். சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் விடுவதை கைவிட வேண்டும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement