கோவை அருகே வளர்ப்பு குதிரைகள் தொல்லை அதிகரிப்பு
தொண்டாமுத்தூர், நவ.5: கோவை அருகே சோமையம்பாளையம் ஊராட்சி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வளர்ப்பு குதிரைகள் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று காலை இரண்டு குதிரைகள் வீதிகளில் ஓடின. அப்போது திருப்பத்தில் எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஊராட்சி குடிநீர் விநியோக பணியாளர் ஜெயபால் மீது குதிரைகள் மோதின.
Advertisement
ஜெயபாலின் கையை கடித்து விட்டு தப்பி ஓடின. இதையடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் கவுன்சிலர் கொங்கு ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement