மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
கோவை, நவ. 1: மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை குழுமம், 6 தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி, தேசிய மாணவர் படை சார்பில் சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு செயல்பாட்டை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை அரசு கல்லூரி முன்பு துவங்கிய பேரணியை கேப்டன் பாகாராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், 450 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி ரேஸ்கோர்சை சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து விழிப்புணர் நாடகம் நடத்தினர். தேதி) வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு தாஸ், ஆறுமுகம் உட்பட 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.