கொப்பரை திருடிய இருவர் கைது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள குடோனை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து அங்கு கொப்பரைகளை தேக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்த கொப்பரை குடோனில் குவித்துப் போடப்பட்டிருந்த கொப்பரைகளில், சாக்கு பைகளில் சுமார் ஒரு டன் கொப்பரையை கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
Advertisement
இது தொடர்பாக, கோமங்கலம் ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குடோனில் இருந்து கொப்பரையை திருடி சென்றது உடுமலை அருகே உள்ள கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (21), சிவா (22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இருவரையும் கைது செய்ததுடன் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் கொப்பரையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement