கோவை சிட்டி மோகன்ராஜ் பைல் 1 குனியமுத்தூர், க.க.சாவடி பகுதிகளில் நாளை மின் தடை
Advertisement
கோவை, அக். 28: குனியமுத்தூர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குனியமுத்தூர் மற்றும் க.க.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டாக்காமுத்தூர் ஒரு பகுதி, முருகன் பதி, சாவடி புதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏஜி பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்காசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
Advertisement