சிஐடியு சார்பில் தொழில் பாதிப்பு கருத்தரங்கம்
Advertisement
கோவை, அக். 28: கோவை சூலூரில் சிஐடியு சார்பில் நேற்று முன் தினம் தொழில் பாதிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு சூலூர் தாலுகா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு மற்றும் மருந்துத் துறையில் 100 சதவீத வரிவிதிப்பு காரணமாகத் தொழில்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மூடப்பட்ட இந்திய பருத்தி கழகத்தை மீண்டும் திறந்து, விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மூடப்பட்ட என்.டி.சி. நூற்பாலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Advertisement