பங்களாமேடு பகுதியில் மருந்து, மாத்திரைகள் எரிப்பு
Advertisement
மேட்டுப்பாளையம், செப்.24: மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் பின்புறம் பழைய நான்கு சக்கர வாகனங்களில் இருந்து உதிரிபாகங்களை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் இச்சாலையின் வழியாக மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதிக்கு செல்ல இயலும். பங்களா மேடு பகுதி நகரின் மைய பகுதியாகவும் உள்ளது. இந்நிலையில் இச்சாலையில் நேற்று குவியல் குவியலாக மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொட்டி அதில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் பாதி எரிந்தும், எரியாமலும் மீதமாக கிடக்கின்றன.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement