ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு
கோவை, ஆக.18: கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாநில அளவில் கோவை மாவட்டத்தில் தான் அதிக ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. உணவு பொருட்கள் ஒதுக்கீடும் கோவை மாவட்டத்திற்கு அதிகமாக இருக்கிறது. மாவட்ட அளவில், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் 1375 ரேஷன் கடைகள் இருக்கிறது. இவற்றில் 406 கடைகள் வாடகை கட்டடத்தில் இருப்பதாக தெரிகிறது. ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் தேவை என பல ஆண்டாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரிசி, பருப்பு, பாமாயில் போன்றவற்றை நல்ல முறையில் இருப்பு வைக்க வேண்டும். மழை பெய்து வருவதால் ரேஷன் பொருட்கள் பாதிக்க கூடாது. பாதுகாப்பு நன்றாக இருக்க வேண்டும். வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதியில் ரேஷன் கடைகளுக்கு காட்டு யானைகள் வந்து செல்வதாக தெரிகிறது. இந்த பகுதியை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தரமாக இருப்பதை கடை விற்பனையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.