மாணவர்களுக்கு பரிசு வைகோ இன்று கோவை வருகை; சூலூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கோவை, ஆக.18: கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (திங்கள்) காலை 11 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து அவர் சூலூர் செல்கிறார்.
அங்குள்ள அண்ணா சீரணி அரங்கத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.எனவே, விமான நிலைய வரவேற்பு மற்றும் சூலூர் பொதுக்கூட்டத்தில், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.