தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராம சபை கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி

கோவை, அக். 12: கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் மாருக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், சமூக நலத்துறை அதிகாரி நீலவேணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில், “வினோப நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாலும், அவர்கள் வாக்களிக்க சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டிய உள்ளதாலும் வினோப நகரிலேயே ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், எச்ஐவி தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement

இக்கூட்டத்தில், தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ரூ.1,791.23 கோடி செலவில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைத்து கோவை மக்களின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடியது, ஊர்மக்களை வெகுவாக கவர்ந்தது.

இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் வசந்த சேனா, கிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவிகள், தூய்மை பணியாளர்கள், வேளாண் துறை அதிகாரிகள், கூட்டுறவு மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement