டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
பொள்ளாச்சி, டிச.6: பொள்ளாச்சி அருகே டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் நேற்று, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு எம்எல்ஏவும், அதிமுக அமைப்பு செயலாளருமான செ.தாமோதரன் கலந்துகொண்டு, ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், வடக்கு முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கிளை செயலாளர்கள் தவச்செல்வகுமார், முத்துச்சாமி, அதிமுக நிர்வாகிகள் ஆச்சிப்பட்டி பழனிசாமி, குழந்தைவேல், மகாலிங்கம், சக்திவேல், செந்தில்குமார், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அதுபோல், கிணத்துக்கடவில் ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சியில், எம்எல்ஏ தாமோதரன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயசீலன், பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, மாவட்ட சிறுபான்மையினர் செயலாளர் சிங், மாவட்ட மகளிரணி கண்ணம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.